Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூரில் 50 லட்சம் மதிப்பிலான போதை பாக்குகள் பறிமுதல்

மே 03, 2019 10:30

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகளான ஹான்ஸ், குட்கா போன்ற பொருட்கள், பெங்களூர், மகாராஷ்டிராவில் இருந்து கடத்திவரப்பட்டு தமிழகத்தில் பரவலாக விற்பனை செய்யப்படுவதும், இதனை ஆங்காங்கே பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  ஆம்பூர் நகர காவல்துறையினர் மற்றும் தனிப்படை போலீசார் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகர காவல்துறையினர் தங்க நாற்கர சாலையில் மே 3 ந்தேதி காலை வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, பெங்களூரிலிருந்து வேலூர் நோக்கி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது, லாரியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, ஹான்ஸ், போதை பாக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் லாரி முழுவதும் பெட்டி பெட்டியாக இருந்தது சோதனையில் தெரியவந்தது. 

லாரியை ஓட்டிவந்த சேலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் குமார் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் காரில் வந்தவர்கள் லாரிக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பாகவும் வந்ததாக அவர்கள் கூறினார்கள்.

தலைப்புச்செய்திகள்