Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உ.பி.யில் எஸ்மா சட்டம்: 6 மாதம் போராட்டம் நடத்த தடை?

டிசம்பர் 20, 2021 04:20

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்கு போராட்டம் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேச மாநில கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர தேவேஷ் குமார் சதுர்வேதி நேற்று, கொரோனா வைரஸ் தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்தவிதமான போராட்டங்களையும நடத்தக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையும் மீறி போராட்டம் நடத்தினால் எஸ்மா சட்டம் பாயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இதுபோன்று உத்தர பிரதேச அரசு ஆறு மாதங்களுக்கு போராட்டம் நடத்த தடைவிதித்தது.

அத்தியாவசிய சேவைக்கான துறைகளில் பணிபுரியம் அரசு ஊழியர்கள் வேலைக்குச் செல்லாமல் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்மா சட்டம் பயன்படும். ஊழியர்கள் விதிகளை மீறினால் எந்தவித கைது வாரண்ட் இல்லாமலும் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும். 

எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஒருவருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக வழங்க முடியும். கடந்த ஆண்டு மே மாதம் எஸ்மா சட்டத்தை கொண்டு வந்தது. நவம்பர் மாதத்தில் போராட்டத்திற்கான தடையை மீண்டும் ஆறு மாதத்திற்கு நீட்டித்தது.

தலைப்புச்செய்திகள்