Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் கூட்டத்தில் மோடி நாளை பங்கேற்பு

டிசம்பர் 20, 2021 04:39

அலகாபாத்: உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா தீவிரமாக களம் இறங்கி உள்ளது. பிரதமர் மோடி உத்தரபிரதேசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் மக்களை கவர்ந்து வருகிறார்.

இந்த வரிசையில் உத்தரபிரதேசத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மிக பிரமாண்டமான மகளிர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரயாக்ராஜ் நகரில் இந்த மாநாட்டுக்காக மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. நாளை இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். அப்போது உத்தரபிரதேச மாநில பெண்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

பெண்களுக்கு கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை அனைத்து துறைகளிலும் அதிகாரம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று ஏற்கனவே பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ஏராளமான உதவிகள் நாளை வழங்கப்பட உள்ளது.

சுமார் 80 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1.10 லட்சம் முதலீட்டு தொகை வழங்கப்படுகிறது. சுமார் 60 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நாளை வழங்கப்படுகிறது. மொத்தத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1000 கோடி நிதி உதவியை பிரதமர் மோடி வழங்குகிறார். இதை தவிர பெண்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இதில் சுமார் 20 லட்சம் பெண்கள் பயன் அடைய உள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கு நிதி உதவி செய்யும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். பெண்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டமும் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்