Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த திமுகவினர்

டிசம்பர் 22, 2021 10:46

தர்மபுரி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் தி.மு.க.,வை செருப்பைக் காட்டி விமர்சித்த நிலையில், தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் செவ்வாயன்று (டிச., 21) கூட்டம் போட்ட அக்கட்சியினர் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

சீமானின் நாம் தமிழர் கட்சி பா.ஜ.,வின் கொள்கைகளுடன் செயல்படுவதாக தி.மு.க., விமர்சித்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் தி.மு.க.,வினரை செருப்பால் அடிப்பேன் என சீமான் மேடை நாகரீகமின்றி செருப்பை தூக்கிக் காட்டினார். இச்செயல் தி.மு.க., நிர்வாகிகளை கொந்தளிக்கச் செய்தது. சமூக ஊடகங்களில் சீமானை ஆபாசமாக திட்டித் தீர்த்தனர். மேலும் இனி எங்கெல்லாம் சீமான் கூட்டம் போடுகிறாரோ அங்கெல்லாம் செருப்பு வீசப்படும் என சிலர் பதிவிட்டனர்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதி, மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் செவ்வாயன்று (டிச., 21) முஸ்லிம் கைதிகள் மற்றும் ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளிகளான 7 பேரை விடுவிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் மாநில பேச்சாளர் ஹிம்லர் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். இவர் ஏற்கனவே குமரியில் கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எதிர்கட்சியினரை கல்லாலேயே போட்டுவிடுவோம், சம்பவமாகிவிடும் என்று பேசியிருந்தார்.

இந்தப் பின்னணியில் ஹிம்லர் என்பவர் தர்மபுரி மொரப்பூரில் பேசிக்கொண்டிருந்த போது தி.மு.க., நிர்வாகி ஒருவர் மேடையேறி, மரியாதையாகப் பேச வேண்டும் என கூறியபடி அடிக்கப் பாய்ந்தார். அவர் மேடையிலிருந்து இறங்கி தப்பித்தார். கீழே இருந்த மற்றொரு தி.மு.க., நிர்வாகி நாற்காலிகளை மேடையிலிருந்தவர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினார். இதனால் பலரும் பயந்து கீழிறங்கி தப்பிச் சென்றனர். உடனடியாக போலீசார் வந்து தி.மு.க., நிர்வாகிகளை தடுத்து அழைத்துச் சென்றனர்.

தலைப்புச்செய்திகள்