Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராமர் கோயில் கட்டுவதற்கு வாங்கப்பட்ட நிலத்தில் ரூ.26 கோடி மோசடி- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டிசம்பர் 23, 2021 03:37

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலத்தில் முறைக்கேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை உருவாக்கப்பட்டு நிலங்கள் வாங்கப்பட்டன. இதில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஒரு நிலம், ரூ.26 கோடிக்கு அறக்கட்டளையிடம் விற்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். இந்த நில ஒப்பந்தங்களுக்கு யார் சாட்சிகள் என்று பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர் பதவியில் உள்ள நபர் ஒருவரும், அயோத்தியின் மேயரும் தான். நில மோசடிக்கு மக்களின் பணம் தான் செலவு செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த முறைகேட்டை உடனடியாக விசாரிக்க வேண்டும்.

ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள நில முறைக்கேடு புகார் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிடுவதாக கூறியது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதனால் இந்த நில முறைக்கேடு வழக்கிலும் மாநில அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் ராமர் கோயில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அதனால் இந்த முறைகேட்டையும் உச்சநீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்