Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்: ரூ. 870 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

டிசம்பர் 23, 2021 03:46

வாரணாசி: பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்று 870 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அடிக்கடி உத்தர பிரதேச மாநிலம் சென்று பல்வேறு திட்டங்களுக்க அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும், இரண்டு அரசுகளும் இணைந்து செயல்படுத்திய திட்டங்களை திறந்து வைக்கிறார்.

அந்த வகையில் தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று மோடி செல்கிறார். அங்கு 870 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 475 கோடி ரூபாய் செலவில் 30 ஏக்கர் நிலத்தில் உருவாக இருக்கும் ‘பனாஸ் டெய்ரி சங்குல்’ திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதன்மூலம் தினசரி ஐந்து லட்சம் லிட்டர் பால் பதப்படுத்த முடியும். மேலும், பல திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார்.

தலைப்புச்செய்திகள்