Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பக்தர்களை திருப்பி அனுப்பிய திருப்பதி தேவஸ்தானம்

டிசம்பர் 25, 2021 02:42

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது ரூ. 300 ஆன்லைன் டிக்கெட் மூலம் 12 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் பக்தர்களும், விஐபி பிரேக் தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி டிரஸ்ட் ஆகியவை மூலம் தினமும் 30,000 மேற்பட்ட தரிசனம் செய்து வருகின்றனர்.

ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் பொருட்டு திருப்பதியில் தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி அல்லது 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்று என இரண்டில் ஏதாவது ஒரு சான்று இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அலிப்பிரியில் தடுத்து நிறுத்தப்பட்டு சான்று இல்லாமல் வரும் பக்தர்களை திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை அலிபிரியில் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

தடுப்பூசி செலுத்தாமலும், கொரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லாமலும் வந்த பக்தர்களை திருப்பி அனுப்பினர்.

திருப்பதியில் நேற்று 31,815 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 14,538 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ3.43 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்