Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு துவக்கம்

ஜனவரி 01, 2022 11:20

புதுடெல்லி: 15 முதல் 18 வயதுடையோருக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி வரும் 3-ம் தேதி முதல் போடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடுமுழுவதும் வரும் 3-ம் தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை 3-ம் தேதி போரூரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதற்கிடையே, 15 முதல் 18 வயது உள்ளவர்கள் தடுப்பூசி போடுவதற்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் 15 முதல் 18 வயதுடைய சிறார் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

கோவின் இணையதளத்தில் ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு பள்ளி அடையாள அட்டை மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நாளை மறுநாள் முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் முன்பதிவு தொடங்கியது.

தலைப்புச்செய்திகள்