Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரவல் அதிகரிப்பு: ஹரியானா மாநிலத்தில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

ஜனவரி 02, 2022 11:13

அம்பாலா: சந்தை மற்றும் வணிக வளாகங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி மற்றும் ஹரியானாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹரியானா மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.

அதன்படி  அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

குர்கான் நகரம் மற்றும் ஹரியானாவின் ஃபரிதாபாத், அம்பாலா, பஞ்ச்சூலா மற்றும் சோனிபட் ஆகிய மாவட்டங்களில்  சினிமா அரங்குகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் மூடப்படும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மால்கள் மற்றும் சந்தைகள் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுவிற்பனை பார்கள் மற்றும் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி.  மாநிலம் முழுவதும் உள்ள காய்கறிச் சந்தைகள், பொதுப் போக்குவரத்து, பூங்காக்கள், மத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 2 முதல் ஜனவரி 12 வரை நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்