Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டன: அமைச்சர் அறிவிப்பு

ஜனவரி 04, 2022 12:23

சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில், தற்காலிகமாக துவங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை வேப்பேரியில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டன. கடந்த ஆட்சியில், ஓராண்டு தற்காலிக அடிப்படையில் தான் அந்த கிளினிக்குகள் திறக்கப்பட்டன. செவிலியர்கள் இல்லாமல் இயங்கி வந்த அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டதுடன், அங்கு பணிபுரிந்த 1,820 டாக்டர்களும் கோவிட் பணியில் உள்ளனர். இவர்களும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் மார்ச் 31 வரை கோவிட் பணியில் ஈடுபடுவார்கள். அந்த திட்டம் முடிந்து விட்டது.

தமிழகத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு அறிகுறி இல்லாமல் இருந்தால், அவர்கள் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு, டாக்டர்கள் அறிவுறையுடன் சிகிச்சை பெறலாம். இவ்வாறு மா. சுப்பிரமணியன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்