Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவர்னர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டசபை கூட்டம்

ஜனவரி 05, 2022 10:38

சென்னை: வணக்கம் எனக்கூறி உரையை ஆரம்பித்த கவர்னர் ஆர்.என். ரவி, கொரோனா தொற்றின் 2-வது அலையின்போது தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்தில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால், கலைவாணர் அரங்கத்திலேயே சட்டசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டசபை கூடும்போது ஆளுநர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சபை தொடங்கியது. சட்டசபை தொடங்கியதும், வணக்கம் எனக்கூறி தனது உரையை ஆரம்பித்தார் ஆர்.என். ரவி. தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘‘கொரோனா தொற்றின் 2-வது அலையின்போது தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு. 

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக உள்ளது. ஒமைக்கரான் வைரஸ் தொற்றை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளத. சிறார்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்