Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

51 தொகுதிகளில் 5-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று ஓய்கிறது

மே 04, 2019 05:36

லக்னோ: நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. இந்நிலையில், 51 தொகுதிகளில் 5-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. 6-ந் தேதி, அவை தேர்தலை சந்திக்கின்றன. இந்த தொகுதிகள், 7 மாநிலங்களில் அமைந்துள்ளன.

அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 7 தொகுதிகள், மத்தியபிரதேசத்தில் 7 தொகுதிகள், பீகார் மாநிலத்தில் 5 தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகள், காஷ்மீர் மாநிலத்தில் 2 தொகுதிகள் என மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இவற்றில் பிரபல தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அடங்கி உள்ளன. மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடும் அமேதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, முன்னாள் மத்திய மந்திரி ஜிதின் பிரசாதா போட்டியிடும் தாவ்ராரா, உத்தரபிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவர் நிர்மல் காத்ரி போட்டியிடும் பைசாபாத் ஆகிய தொகுதிகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மேற்கண்ட 51 தொகுதிகளிலும் இன்று மாலை தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இம்மாதம் 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

5-வது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில், உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரிகள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

லக்னோவில் சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிடும் பூனம் சின்காவுக்காக அவருடைய மகள் சோனாக்‌ஷி சின்கா பிரசாரம் செய்தார்.

தலைப்புச்செய்திகள்