Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் மீண்டும் தீவிரமாக பரவும் கொரோனா; 4,862 பேர் புதிதாக பாதிப்பு

ஜனவரி 06, 2022 11:17

சென்னை: தமிழகத்தில் 4,862 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,60,449. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,69,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,07,058.

இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 75,86,146 பேர் வந்துள்ளனர்.

சென்னையில் 2481 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 2,381 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 252 தனியார் ஆய்வகங்கள் என 321 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,364.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 5,70,33,924.

*  ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,17,382.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 27,60,449.

* தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை: 4,862

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,481.

* சென்னையில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 4259

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 16,11,372 பேர். பெண்கள் 11,49,039 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,893 பேர். பெண்கள் 1,969 பேர்.

*  டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 688 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 27,07,058 பேர்.

* கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 9 பேர் உயிரிழந்தனர்.5 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,814 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8656 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்