Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளியில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை: புதுச்சேரி அரசு அறிவிப்பு

ஜனவரி 07, 2022 10:29

புதுச்சேரி: 'புதுச்சேரி மாநிலத்திற்கு வருபவர்களுக்கு, மாநில எல்லையில் கொரோனா பரிசோதனை செய்து, 'நெகட்டிவ்' என வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்' என அறிவிக்கப் பட்டுள்ளது.

புதுச்சேரி கலெக்டர் வல்லவன் கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவல் அச்சுறுத்தலை தொடர்ந்து, கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன.

உணவகங்கள், ஓட்டல்கள், பார்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் துறை நிறுவனங்கள், பியூட்டி பார்லர், சலுான், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடம், யோகா பயிற்சி மையங்கள் 50 சதவீத பேருடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் குடமுழுக்கு, பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்பின்றி மட்டுமே நடத்தப்பட வேண்டும்.ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து, மாநில எல்லைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் பயணியர், தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வெளியில் இருந்து புதுச்சேரி வருவோருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் 'நெகட்டிவ்' என முடிவு வந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்