Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முழு ஊரடங்கு; ஒரே நாளில் ரூ.218 கோடிக்கு மது விற்பனை

ஜனவரி 09, 2022 12:29

சென்னை: தமிழகத்தில் நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று மதுகடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதையடுதது நேற்று சனிக்கிழமை, மதுபானக்கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

நீண்ட வரிசையில் நின்ற மதுப்பிரியர்கள் மதுபானங்களை  வாங்கி சென்றனர்.   திருப்பத்தூர் மாவட்டம் பைபாஸ் சாலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ள மூன்று டாஸ்மாக் கடைகளில்  ஏராளமானோர் திரண்டனர். தங்களுக்கு பிடித்த மதுபானங்களை அவர்கள் வாங்கி சென்றனர். அவர்களது இருசக்கர வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததால், சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம், டிவிஎஸ் கார்னர் பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது.  முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர்.  

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.217.96  கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்