Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் பாராளுமன்றத்தில் பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்படுகிறது

பிப்ரவரி 06, 2019 02:12

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மூன்று முறை பிரதமராக பதவி வகித்தார். 1996ல் 13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004ம் ஆண்டு வரை என மூன்று முறை இந்திய பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவின் மிகவும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ம் தேதி காலமானார். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் உருவப்படத்தை திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். 

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய ஹாலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் பிப்ரவரி 12-ம் தேதி திறக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். வாஜ்பாய் படத்திறப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மத்திய மந்திரிகள், தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தலைப்புச்செய்திகள்