Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறிகுறியே இல்லாமல் பரவும் கொரோனா தொற்று

ஜனவரி 09, 2022 12:46

கோவை: கோவையில் ஒரே நாளில் 585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் குறைந்திருந்த கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக அதித் தீவிரமாக பரவி வரும் நோய்த் தொற்று பாதிப்பால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் 26 இடங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் அருணா கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியும் பகுதிகள், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் “எஸ்’ ஜீன் இல்லாதவர்களின் குடியிருப்பு பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

தவிர கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படும் ஒவ்வொரு நபரின் வீடும் தனிமைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. 

தேவைக்கேற்ப தொடர்ந்து மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் அதி கரிக்கப்படும். தொடர்ந்து நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்களை கண்காணிப்பதற்காக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் வெளி நாடுகளில் இருந்து வந்த பயணிகளை கண்காணிக்க தனியாக 32 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது 1,300&க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. 

இவ்வாறு அவர் கூறினார்.

புதிதாக 585 பேருக்கு கொரோனா கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வருகிறது. நேற்று  புதிதாக 585 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட் டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 55 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 174 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 780 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 2,524 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.  தற்போது 2 ஆயிரத்து 30 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு ஒமைக்ரான் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கோவையில் ஒமைக்ரான் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 4 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் பாதிக்கப்பட்டவர்கள்  பெரும் பாலானவர்கள் அறிகுறி இல்லாத தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள இ மற்றும் டி ஹாலில் 650 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நேற்று முன்தினம் இரவு முதல் அங்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலையிலும் பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

அறிகுறியின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர்களை கண்காணிக்க டாக்டர்கள் மற்றும் மருத் துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், தீவிர பாதிப்பு உள்ளவர்கள்  அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ.யில் அனுமதிக்கப்படுவதாகவும்  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்