Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று: மா.சுப்பிரமணியன்

ஜனவரி 11, 2022 01:31

சென்னை: ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுவதால், தமிழகத்தில் ஒமைக்ரான் சோதனை மேற்கொள்வது நிறுத்தப்பட்டுவிட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா உறுதி செய்யப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்றும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா தொற்றும் தான் வருகிறது.

ஒமைக்ரான் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுகின்றனர். இதனால், தமிழகத்தில் ஒமைக்ரான் சோதனை மேற்கொள்வது நிறுத்தப்பட்டுவிட்டது. டெல்டாவும், ஒமைக்ரானும் இணைந்து இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு மிதமான அறிகுறியே இருப்பதால், வீடுகளிலேயே தனிமைபடுத்திக் கொள்கின்றனர்.

 அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை வருவதால், மெகா தடுப்பூசி முகாமை இந்த வாரத்திற்கு பதில் அடுத்தவாரம் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இப்போதைக்கு முழு ஊரடங்கு தேவையில்லை. கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு போதும். ஊரடங்கால் மக்களின் பொருளாதாரம்பாதிக்கப்பட கூடாது என முதல்வர் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்