Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசு மருத்துவமனையில் வேலை: 78 காலிப்பணியிடங்கள்

ஜனவரி 12, 2022 04:50

அரியலூர்: அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் காலியாக உள்ள Lab Technician & Other பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனம்:     மருத்துவ கல்லூரி மருத்துவமனை(அரியலூர் )
பணியின் பெயர்:    Lab Technician & Other
பணியிடங்கள்உ:    78
விண்ணப்பிக்க கடைசி தேதி:    19.01.2022
விண்ணப்பிக்கும் முறை:    Offline

மருத்துவ கல்லூரி மருத்துவமனை பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Lab Technician & Other பணிகளுக்கென மொத்தம் 78 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Lab Technician – 31 பணியிடங்கள்
Van Driver – 2 பணியிடங்கள்
Ward Boy – 8 பணியிடங்கள்
Hospital Worker – 12 பணியிடங்கள்
Stretcher Bearer – 6 பணியிடங்கள்
Sweeper – 19 பணியிடங்கள்

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அள்ளாது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி மருத்துவமனை விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி: முதல்வர், அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூர் -621704

தலைப்புச்செய்திகள்