Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்து வரும் நாட்களில் கூடுதல் கவனம் தேவை: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

ஜனவரி 14, 2022 11:34

சென்னை :''தமிழகத்தில், அடுத்து வரும் நாட்களில், மக்கள் மிகவும் கவனமாக இருந்து, முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை நேற்று ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில், மும்பை, டில்லி, கோல்கட்டா போன்ற நகரங்களில், கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் அலையை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒமைக்ரான் தொற்று பரவும் வேகம் அதிகரிப்பதால், மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். வரும் நாட்கள் முக்கியமானவை என்பதால், மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் பரவும் வேகம் குறையும்.

டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், 25 முதல் 30 சதவீதத்தினருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டது. ஒமைக்ரான் பாதிப்பில் 5 முதல் 10 சதவீதம் தான் மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படுகிறது.
ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு, குறைந்த அளவே நுரையீரல் பாதிப்பு உள்ளதால், 1 சதவீதத்தினருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் போதுமான அளவு உள்ளது. கூடுதலாக கொரோனா தடுப்பூசி வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்