Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது

ஜனவரி 16, 2022 11:59

விருதுநகர்: வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் பணமோசடி செய்ததாக நல்லதம்பி மீது அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த  ராஜேந்திர பாலாஜி கடந்த 5-ந்தேதி கைது செய்யப்பட்டார்.திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த நிலையில், ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

சில நிபந்தனைகளின் பெயரில் ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

இந்நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகாரளித்த விஜய நல்லதம்பி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் பணமோசடி செய்ததாக நல்லதம்பி மீது அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்