Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எம்.ஜி.ஆர் 105வது பிறந்தநாள்; பிரதமர் மோடி வாழ்த்து

ஜனவரி 17, 2022 12:10

புதுடெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளை இன்று (ஜன.,17) அதிமுக.,வினர் கொண்டாடி வருகின்றனர். மேலும், தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர்-க்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் தெரிவித்ததாவது: பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது. இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்