Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புவியரசன் மாற்றம்: சென்னை வானிலை ஆய்வு மைய புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமனம்

ஜனவரி 17, 2022 12:16

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக இருந்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீரென கனமழை கொட்டியது. இதனால், மக்கள் அதிகளவு சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த திடீர் மழையை சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணிக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், ‛வானிலை நிலவரங்கள் துல்லியமாக கணித்து சொல்ல முடியாத நிலை சென்னையில் உள்ளது,' என்றார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமித்ஷாவிற்கு, சென்னை வானிலை ஆய்வு மையத்தினை மேம்படுத்திட கோரி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக இருந்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்