Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக அரசின் பொங்கல் தொகுப்பு ஊழல் விரைவில் வெளிவரும்: அண்ணாமலை பேட்டி

ஜனவரி 18, 2022 10:04

திருப்பூர்: ''திருப்பூரை சிங்கப்பூருக்கு இணையாக மாற்றுவதே பிரதமரின் திட்டம்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலை அளித்த பேட்டி: நுால் விலை ஏற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காதது மாநில அரசின் தவறு. இதற்காக, ஜன., 21ல் திருப்பூரில் உண்ணாவிரத போராட்டமும், 25ம் தேதிக்கு பின், தொழில் துறையினரை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் சந்திக்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எதற்கெடுத்தாலும் மத்திய அரசை கைகாட்டிவிட்டு, மாநில அரசு தப்பிக்க முயற்சிக்கிறது. திருப்பூரை சிங்கப்பூருக்கு இணையாக மாற்றும் திட்டம் பிரதமரிடம் உள்ளது. தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று, மூன்று நாட்களில் ஜி.எஸ்.டி., உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி, மிகப்பெரிய பொய் மூட்டை என்பதற்கு, நகைக்கடன் தள்ளுபடி ஒரு உதாரணம். நகைக்கடன் வாங்கிய 75 சதவீதம் பேரை ஏமாற்றி உள்ளனர். பொங்கல் பரிசு என்ற பெயரில், 21 பொருட்கள் கொடுத்தனர். பொருட்கள் இருந்தால், பை இல்லை; பை இருந்தால் பொருட்கள் இல்லை. பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில், தி.மு.க., அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழர் நலன் என கூறிக் கொண்டு வெளி மாநிலங்களில் பொருட்களை கமிஷனுக்கான வாங்கியுள்ளனர். தரம் இல்லாத பொருட்களை கொடுத்து விட்டு, மக்களை அவமானப்படுத்தி விட்டனர். பொங்கல் பரிசு பொருட்களில் வழங்கிய புளியில், பல்லி இருந்ததாக கூறியவர் மீது வழக்கு போட்டுள்ளனர். அவரது மகன் தற்கொலை செய்து கொண்டு விட்டார். பொங்கல் பரிசு பொருட்கள் ஊழல் விரைவில் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்