Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய கருத்துக்கணிப்பு; உத்தரபிரதேசத்தில் மீண்டும் அமோக வெற்றியை நோக்கி யோகி!

ஜனவரி 18, 2022 11:58

லக்னோ: மீண்டும் உபியில் பாஜகவே ஆட்சியை பிடிக்கும் என்று மற்றொரு கருத்து கணிப்பு உறுதிப்படுத்தி உள்ளது. அதிலும் யோகி தலைமையிலான ஆட்சியே அம்மாநிலத்தில் தக்க வைக்கும் என்றும் அந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க போகிறதுஉத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

உத்தரபிரதேசம் இதில், உபி தேர்தலை நாடே உற்று நோக்கி வருகிறது.. மிகப்பெரிய மாநிலம் என்பதாலும், இந்த மாநில வெற்றிதான் மத்தியில் ஆட்சியை பிடிக்க அடித்தளமாக அமையும் என்பதாலும் உபி தேர்தல் மிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.. அதனால்தான், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உபிக்கு மட்டும் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அதற்கேற்றார்போல் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் வெளியாகி வருகின்றன.. கடந்த வாரம் ஏபிபி சிவோட்டர் கருத்து கணிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது.. அதில், பாஜகவுக்கு 223 முதல் 235 இடங்கள் கிடைக்கும் என்று கணித்து கூறியிருந்தது.. 41.5% வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும் என்றும் அவாத், புந்தேல்கண்ட், பூர்வாஞ்சல் மற்றும் மேற்கு உ.பி., ஆகிய அனைத்து பகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கும் என்றும் அந்த கருத்து கணிப்பு தெரிவித்தது. 

அதேபோல, காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை படுமோசமான தோல்வியை சந்திக்கும் என்பதைதான் சிவோட்டர் தெரிவித்தது. அதாவது வெறும் 7 இடங்கள்தான் கிடைக்குமாம். 2017-ல் காங்கிரஸ் 7 இடங்களை பெற்றிருந்தநிலையில், இப்போதும் அதே 7 இடங்களை சிவோட்டர் கணித்திருந்தது.. 

இந்நிலையில், இந்தியா டிவி கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.. அதில், பாஜக 230 - 235 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது... அகிலேஷ் யாதவ் அடுத்ததாக, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி 160 - 165 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 3 - 7 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்வாடி 3 -5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அந்த கணிப்பு கூறுகிறது. அதேபோல, ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பிலும் பாஜகவே மறுபடியும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

அதாவது, பாஜக 41.3 சதவீத வாக்குகளை பெற்று 252 - 272 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், சமாஜ்வாடி 33.1 சதவீத வாக்குகளைப் பெற்று 111 - 131 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளது.

காங்கிரஸ் 7 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் 13.1 சதவீத வாக்குகளையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. சுருக்கமாக சொன்னால், பெரும்பான்மையான இடங்களிலும் வெற்றி பெறும் என்பதையே இதுவரை வெளிவந்துள்ள கணிப்புகள் எடுத்து காட்டுகின்றன.

அதேபோல, இந்த ஒருவருடமாக உபியில் தங்கி தேர்தல் களப்பணியை மேற்கொண்டு வரும் பிரியங்காவின் காங்கிரசுக்கோ வெறும் 7 சீட்களே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்