Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா 3வது அலையில் அதிக உயிரிழப்பு இல்லை: மத்திய அரசு தகவல்

ஜனவரி 21, 2022 11:18

புதுடெல்லி :'கொரோனா வைரசின் இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போல் இந்த முறை அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை' என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மூன்றாம் அலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நம் நாட்டில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது. எனினும் இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போல் இந்த முறை அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 94 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் 'டோஸ்' செலுத்தப்பட்டுள்ளது; 72 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.இதேபோல் 15 - 18 வயதுக்கு உட்பட்டோரில் 52 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்