Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிகரிக்கும் கொரோனா தொற்று: டெல்லியில் வார இறுதி ஊரடங்கை ரத்து செய்ய கவர்னர் மறுப்பு

ஜனவரி 22, 2022 10:45

புதுடெல்லி: வார இறுதி ஊரடங்கை ரத்து செய்ய முடியாது, அத்தியாவசியமற்ற கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று துணைநிலை கவர்னர் அனில் பைஜால் மறுத்துவிட்டார்.

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வார இறுதி ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வார இறுதி ஊரடங்கை ரத்து செய்வது தொடர்பான முன்மொழிவை துணைநிலை கவர்னர் அனில் பைஜாலுக்கு டெல்லி அரசு நேற்று அனுப்பியது. தினசரி கடைகளைத் திறக்கவும், 50 சதவீத ஊழியர்களுடன் தனியார் அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் வார இறுதி ஊரடங்கை ரத்து செய்ய முடியாது, அத்தியாவசியமற்ற கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று துணைநிலை கவர்னர் அனில் பைஜால் மறுத்துவிட்டார். அதேநேரம், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளார்.

டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா நேற்று காணொலி வாயிலாக பேசுகையில், டெல்லியில் கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் நடைபெற அனுமதிப்பது அவசியம் என்றார். ஆனால் துணைநிலை கவர்னர் தலைமை வகிக்கும் டெல்லி பேரிடர் மேலாண்மைக் குழு அலுவலர் ஒருவர் கூறுகையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாகத்தான் இருக்கிறது. அது குறையும் வரை கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியாது என்றார்.

தலைப்புச்செய்திகள்