Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரவலை தடுக்க அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

ஜனவரி 23, 2022 11:17

புதுச்சேரி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட் டுள்ளது. 

தொற்றால் பாதிக்கப் பட்டவர்களில் பலர்  பரிசோதனை செய்வதில்லை. அப்படி பரிசோதனை செய்தால் தொற்று பாதிப்பு உயரும். புதுவை மாநிலத்தில் 75 சதவீதம் பேருக்கு தொற்று அறிகுறி உள்ளது.

புதுவையில் உமிழ்நீர் பரிசோதனை குறைந்து வருகிறது. எனவே உமிழ்நீர் பரிசோதனையை அதிகரித்து தொற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கொரோனா பரவலை தடுக்க அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. வழிகாட்டு நெறிமுறைகள் கட்டுப்பாடுகள் நடை முறையில் இல்லை. அனைத்து துறை அதிகாரி களும் அலட்சியமாக செயல் படுகிறார்கள்.
புதுவை கவர்னரும், முதல்-அமைச்சரும் தங்களின் கடமையை மறந்து மாநில மக்களை பகடை காயக்கிவிட்டனர். 

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 47 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். போர்கால அடிப்படையில் அரசு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஜிப்மருக்கு சிகிச்சை வரும் நோயாளிகள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டிய கடமை டாக்டர்களுக்கு உண்டு. மக்களுக்கு பேரிடர் காலத்தில் சேவை செய்வது தான் தரம் வாய்ந்த மருத்துவமனையின் வேலை. கொரோனாவை காரணம் காட்டி ஜிப்மர் நிர்வாகம் தனது கடமையில் இருந்து தவறக்கூடாது. 

அனைத்து நோயாளி களுக்கும் ஜிப்மரில் சிகிச்சை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதவும் உள்ளேன். எனவே ஜிப்மர் நிர்வாகம் தனது அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்.

மாநில அரசின் அதிகாரத்தை படிப்படியாக பறித்து மத்திய அரசு சர்வாதிகார போக்கில் மாநிலங்களை டம்மியாக மாற்றி வருகிறது. மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக்கூடாது. இதனை அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்