Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெற்றி பெற்றால் ஒரு போதும் கட்சி தாவ மாட்டோம்; கோவிலில் சத்தியம் செய்த காங்கிரஸ் வேட்பாளர்கள்

ஜனவரி 24, 2022 11:05

பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள், 'நாங்கள் வெற்றி பெற்றால் ஒரு போதும் கட்சி தாவ மாட்டோம்' என, கோவில், சர்ச், மசூதியில் சத்தியம் செய்யும் கலகலப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக, காங்., தலைவர்கள் முன் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 40 தொகுதிகள்கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ., நடக்கிறது. இங்கு, 40 தொகுதிகள் அடங்கிய சட்டசபைக்கு அடுத்த மாதம் 14ல் தேர்தல் நடக்க உள்ளது.

கோவாவில் 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், 17 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. எனினும் 14 தொகுதி களில் வென்றிருந்த பா.ஜ., சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சிஅமைத்தது. இதன்பின், கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பலரும் பா.ஜ.,வுக்கு தாவி விட்டனர்.

சட்டசபையில் காங்கிரசுக்கு தற்போது இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர்.காங்கிரசில் மட்டுமல்லாது மற்ற கட்சிகளிலும் இது அரங்கேறி உள்ளது. கோவாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 24 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறியுள்ளனர். எம்.எல்.ஏ.,க்களின் கட்சி தாவலால் நிலைகுலைந்து போன காங்கிரஸ் இம்முறையும் அதுபோல் நடந்துவிடக் கூடாது என அஞ்சுகிறது.

மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 34 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.இந்நிலையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரையும் பணஜியில் உள்ள மகாலட்சுமி கோவில், பாம்போலிமில் உள்ள சர்ச், பெடிமில் உள்ள தர்கா ஆகியவற்றுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேற்று அழைத்துச் சென்றனர்.அங்கு, 'தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானால், ஒரு போதும் வேறு கட்சிக்கு தாவ மாட்டோம்' என வேட்பாளர்களை சத்தியம் செய்ய வைத்தனர்.

வேட்பாளர்களுடன் கோவா மாநில காங்., தேர்தல் பொறுப்பாளர் சிதம்பரம், மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சடோன்கர் உட்பட பலர் சென்றனர்.இது பற்றி சடோன்கர் கூறுகையில், ''மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தவே வேட்பாளர்களை இந்த உறுதிமொழியை எடுக்க வைத்தோம்,'' என்றார்.கோவா தேர்தலில் ஆம் ஆத்மியும் இந்த முறை களம் இறங்கியுள்ளது. 'தேர்தலில் வெற்றி பெற்றால், வேறு கட்சிக்கு நிச்சயம் மாற மாட்டோம்' என பத்திரத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கையெழுத்து வாங்கிஉள்ளார். தேர்தல் 'ஹைலைட்ஸ்'=பா.ஜ.,விலிருந்து நேற்று முன்தினம் விலகிய கோவா முன்னாள் முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர், மாண்ட்ரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துஉள்ளார்

=பஞ்சாப் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது; இந்த தேர்தலில் போட்டியிட, பிரபலமான பாடகர்களுக்கு கட்சிகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன= பஞ்சாபில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில், 37 தொகுதிகளில் இக்கட்சி போட்டியிடுகிறது. இதில், 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அமரீந்தர் சிங் நேற்று அறிவித்தார்=

உத்தர பிரதேச சட்ட சபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து அப்னா தளம் கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சியின் சார்பில், ராம்பூர் மாவட்டம் ஸ்வார் தொகுதியில் ஹைதர் அலி கான் போட்டியிடுவார் என அறிவிக்கப் பட்டுள்ளது= கொரோனா பரவல் காரணமாக ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துஉள்ளது. இதனால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, வாடகைக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.சமாஜ்வாதி கட்சியில்உயரமான மனிதர்உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரைச் சேர்ந்தவர் தர்மேந்திர பிரதாப் சிங், 46. இவர், 8 அடி, 1 அங்குலம் உயரமுள்ளவர்.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் நேற்று அவர் அந்த கட்சியில் இணைந்தார். பிரியங்காவை சந்திக்க தயார்உத்தர பிரதேசத்தில் 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், ரேபரேலி தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அதிதி சிங். கடந்தாண்டு இவர் பா.ஜ.,வுக்கு தாவினார். வரும் தேர்தலில், பா.ஜ., சார்பில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் கூறுகையில், ''ரேபரேலி சட்டசபை தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டால், அவரை கண்டிப்பாக தோற்கடிப்பேன்,'' என்றார்.

தலைப்புச்செய்திகள்