Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

ஜனவரி 25, 2022 10:48

சென்னை: கொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக பின்பற்றி தோ்தலை நடத்துவதற்கு உத்தரவிடலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று 3-வது அலை தீவிரம் அடைந்துள்ளதால், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்க கோரி மருத்துவா்கள் நக்கீரன், பாண்டியராஜ் உள்பட பலா் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-

உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், அதற்கு எதிராக ஐகோர்ட் எப்படி உத்தரவிட முடியும்? இதே சூழலில் தான் பஞ்சாப், உ.பி உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி எங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதேநேரம், கொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக பின்பற்றி தோ்தலை நடத்துவதற்கு நாங்கள் உத்தரவிடலாம். இல்லையென்றால், மனுதாரா் சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம். 

இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும். தோ்தலை மாநிலத் தோ்தல் ஆணையம் எவ்வாறு நடத்துகிறது என்பதை நாங்கள் கண்காணிப்போம். 

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மற்ற மனுதாரா்கள் தரப்பு வாதத்திற்கான விசாரணை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்