Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உச்சநீதிமன்றத்தில் 13 நீதிபதிகள், 400 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

ஜனவரி 26, 2022 11:38

புதுடெல்லி: உச்சநீதிமன்ற ஊழியர்கள் 400 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் அதிகரித்த கொரோனா தொற்றுக்கு சிறைச்சாலை கைதிகள், காவல்துறையினர், நாடாளுமன்ற ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையல் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும், ஊழியர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.  

தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் வழக்கு தொடர்பாக  விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், வழக்கை அவசரமாக விசாரிக்க பதிவாளர் அலுவலகம் பட்டியலிடுவதில்லை எனவும் வழக்கை முன் கூட்டியே விசாரிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அப்போது பேசிய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, உச்சநீதிமன்றத்தில் 
13 நீதிபதிகளும், 400 ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பால் உடல் ஒத்துழைக்க மறுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதை வழக்கறிஞர் புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். இதையடுத்து நிலையை புரிந்து கொள்வதாக அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்