Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வு விவகாரம் - அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்க அ.தி.மு.க. முடிவு என தகவல்

பிப்ரவரி 05, 2022 10:19

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக முன்வைக்கப்படுகிறது.

அதேசமயம், ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து, நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட 5-2-2022 அன்று காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.
 
இதற்கிடையே, அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு இன்று கூட்டவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கப் போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

தலைப்புச்செய்திகள்