Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்: செங்கம் கு.ராஜாராம் தமிழக அரசுக்கு கோரிக்கை

மே 04, 2019 01:44

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு போதுமான அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்து, ஏற்கனவே செயல்பட்ட இடத்திற்கு மருத்துவமனையை மாற்ற வேண்டும் என கோகுல மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் செங்கம் கு.ராஜாராம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

திருவண்ணாமலை அரசு மருத்துவமனை ஏற்கனவே காமராஜர் சிலை அருகில் இருந்த போது அனைத்து வசதிகளும் இருந்தன. பொதுவாக குடிநீர், பஸ் வசதி போதுமானதாகவே இருந்தது. மருத்துவமனை அருகில் இரவு, பகல் பாராமல் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் தற்போது இடமாற்றப்பட்டதால் அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை. பழைய இடத்தில் இருந்த வரை ஏழைகளுக்கு பயன் உள்ளதாக இருந்தது. ஆனால் மருத்தவ கல்லூரி வருகிறது, அதற்கு போதுமான வசதி இல்லை என புதிய இடத்தில் அதாவது கலெக்டர் ஆபிஸ் பின்னால் மாற்றினார்கள்.

அதன்பிறகுதான் மக்களுக்கு பிரச்சனையே ஆரம்பமானது. அரசு மருத்துவமனை என்பது ஏழை, எளிய மக்கள் சிகிச்சைப் பெற அரசால் செயல்படுத்தப்படுவதுதான். ஆனால் அரசு செயல்படுத்தும் அந்த மருத்துவமனைக்கு மக்கள் செல்வதற்கு கூட சரியான வசதி இல்லை என்பதுதான் உண்மை. காரணம் பஸ் நிலையத்திற்கு, மருத்துவமனைக்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம்.

உள்ளூர் நோயாளிகள் ஆட்டோவில் சென்றால், போக வற தனி ஆட்டோவாக இருந்தால் சுமார் 200 ருபாய் செல்வாகும். ஷேர் ஆட்டோக்கள் மக்கள் அதிமாக வந்தால் மட்டுமே சொல்வார்கள். அதுவரை உடல்நிலை மோசமானவர்கள் காத்து இருக்க முடியாது. 200 ரூபாய் ஆட்டோவுக்கு கொடுக்கும் பணம் இருந்தால் தனியார் மருத்துவமனைக்கு சென்று விடலாம். பஸ் வசதி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறைதான் உண்டு.  எப்படியோ போராடி மருத்துவமனைக்கு சென்றாலும், அங்கு செல்லும் நோயாளிகளுக்கு குடிநீர் வசதி என்பது சுத்தமாக கிடையாது. அனைவரும் ஒரு லிட்டர் தண்ணீர் 20 ருபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை.

நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு வெளியில் அமருவதற்கான வசதி எதுவும் இல்லை. இரவு முழுவதும் அங்கு அவர்கள் இருந்தால் காலை கடன் செலுத்துவதற்கான வசதிஇல்லை. அதை விட கொடுமையான விஷயம். எனது மாமா மகள் ஓரு வாரத்திற்கு முன்பு பிரசவத்திற்கு இரவு மணி 12 மணிஅளவில் சென்றார். செல்லும் போது வலியால் இருந்தார். அங்கு சென்று டாக்டர் பார்க்காமல் அங்கு இருந்த நர்ஸ் மற்றும் பயிற்சி டாக்டர்கள் பார்த்தனர். 

டாக்டரை பார்க்க வேண்டும் என கேட்டதற்கு  அவர் தூங்குகிறார்கள். அவரை எழுப்ப முடியாது என தட்டி கழித்து விட்டனர். பிறகு கேட்டதற்கு நன்றாக உள்ளார்கள் என கூறினர். பிறகு அங்கு இருந்த நர்ஸ் ஒருவர் சோடா, பாலும் கலந்து தாருங்கள் வலி நின்று விடும் என கூறினார். மீண்டும் நாங்கள் கேட்டபோது நன்றாக உள்ளனர் என கூறினர்.

ஆனால் காலை ஜந்து மணிக்கு குழந்தை வயிற்றில் இறந்து விட்டது என அதிர்ச்சியான தகவலை கூறினர். பிறகு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறி ஆபரேஷன் செய்து இறந்து குழந்தை எடுத்து விட்டனர். இதற்கு காரணம் வேலை உள்ள அனுபவம் வாய்ந்த டாக்டர் பணி இருந்தும் வந்து முறையான சிகிச்சை அளிக்கவில்லை. இதனாலேயே இந்த இழப்பு. இது போல் பல விதத்தில் தவறுகள் அரசு மருத்துவமனையில் நடந்து வருகிறது.

இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரசு மருத்துவமனை டீனிடம் முறையாக மனு அளித்துள்ளோம். தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிக பெரிய அளவில் அரசு மருத்துவமனைக்கு எதிராக போராட்டம் நடத்த கோகுல மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். மருத்துவமனையில் விசாரித்தால், டாக்டர் ஆம்புலன்ஸ் 3 மட்டுமே உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

எனவே தமிழக அரசு இதுகுறித்து தகுந்த விசாரணை மேற்கொண்டு பழைய இடத்தில் போதுமான வசதிகளுடன் மருத்துவமனை மீண்டும் இயங்கவும், கூடுதலாக மருத்துவர்களை நியமனம் செய்து, நோயாளிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என கோகுல மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் செங்கம் கு.ராஜாராம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்