Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை- ஈரோடு பயணிகள் ரெயில் இயக்கப்படுமா?

பிப்ரவரி 07, 2022 10:18

திருப்பூர்: கோவை - மேட்டுப்பாளையம் இடையே இன்று முதல் ‘பாசஞ்சர்’ ரெயில் இயக்கப்படும். இதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30. ஆதார் நகல், போட்டோ விவரங்களை சமர்பித்து ரூ.185 ரூபாய் செலுத்தி சீசன் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. 

இது கோவை மாவட்டத்தை சேர்ந்த ரெயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. இந்த ரெயிலைக் காட்டிலும், அதிக அளவு பயணிகளை கொண்டது கோவை - ஈரோடு (வழி: திருப்பூர்) ‘பாசஞ்சர்’ ரெயில். 3 மாவட்ட பயணிகள் இந்த ரெயில் இயக்கத்துக்கு அனுமதி வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் தெற்கு ரயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால்  திருப்பூர் மற்றும் ஈரோட்டில் இருந்து கோவைக்கு 2 முதல் 4 மணி நேரம் பயணித்து தினமும் பஸ்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர், கல்லூரி மாணவர்கள் கோவை சென்று திரும்புகின்றனர். 

இந்த விஷயத்தில் தெற்கு ரெயில்வே வணிகப்பிரிவு அதிகாரிகள் தலையிட்டு கோவை, - திருப்பூர் - ஈரோடுஇடையேயான ‘பாசஞ்சர்’ ரெயில் இயக்கத்துக்கு அனுமதி தர வேண்டும் என்பது பல ஆயிரக்கணக்கான ரெயில் பயணிகளின்  எதிர்பார்ப்பாக உள்ளது. 

தலைப்புச்செய்திகள்