Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3-வது அலையில் உச்சம் தொட்ட பின்னர் சென்னையில் கொரோனா பாதிப்பு 1000-க்கும் கீழ் குறைந்தது

பிப்ரவரி 07, 2022 10:28

சென்னை: கொரோனா 3-வது அலையில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக பரவியது. சென்னையில் தினசரி தொற்று 8,500-க்கும் மேல் ஏற்பட்டது.
ஒமைக்ரான் பாதிப்பால் உயிரிழப்பு குறைந்து இருந்தாலும் அதன் பரவும் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளி, பொது இடத்தில் முகக்கவசம் அணிந்து செல்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவித்தது.

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலும் அரசு தீவிரம் காட்டியது. இதற்காக வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

1-ந்தேதி

2,348

2-ந்தேதி

2,054

3-ந்தேதி

1,751

4-ந்தேதி

1,475

5-ந்தேதி

1,223

6-ந்தேதி

972

அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வேகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு 7 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

சென்னையில் 3-வது அலையில் உச்சம் தொட்டு இருந்த கொரோனா பாதிப்பு நேற்று முதல் முறையாக மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது. நேற்று மட்டும் சென்னையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 972 ஆக உறுதியானது. 4,342 பேர் குணமாகி உள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தற்போது நிலவரப்படி அடையாறு மண்டலத்தில் மட்டும் 2100 பேர் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். மற்ற அனைத்து மண்டலங்களிலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-

திருவொற்றியூர்-883
மணலி-896
மாதவரம்-1,046
தண்டையார்பேட்டை-1,310
ராயபுரம்-1,292
திரு.வி.க.நகர்-1,501
அம்பத்தூர்-1,294
அண்ணாநகர்-1,765
தேனாம்பேட்டை-1,796
கோடம்பாக்கம்-1,785
வளசரவாக்கம்-1,367
ஆலந்தூர்-1,263
அடையாறு-2,100
பெருங்குடி-1,570
சோழிங்கநல்லூர்-1,280
பிறமாவட்டங்கள்-92.

தலைப்புச்செய்திகள்