Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவாரா? - தினேஷ் கார்த்திக் விளக்கம்

பிப்ரவரி 08, 2022 10:43

ஐ.பி.எல். 2022 சீசனுக்கான மெகா ஏலம் வரும் 12, 13-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மூத்த வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள், அசத்தல் பவுலர்கள், சிறந்த ஆல் ரவுண்டர்கள், இளம் வீரர்கள் என பலர் தங்கள் பெயரை பதிவுசெய்துள்ளனர்.

இதற்கிடையே, தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது அங்கிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து விளையாட விரும்புவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், சென்னையை சேர்ந்தவன் நான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும். எந்த அணியில் விளையாட வாய்ப்பு வந்தாலும் அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்