Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகளின் பயிர்காப்பீடு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் செல்வகணபதி எம்.பி. கோரிக்கை

பிப்ரவரி 11, 2022 11:32

புதுச்சேரி:  மத்திய வேளாண் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமரை சந்தித்து புதுவை பா.ஜ.க. எம்.பி. செல்வகணபதி மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

பயிர்களுக்கான தேசிய காப்பீட்டு திட்டம், பிரதான் மந்திரி பசல் பீமா யோஜான திட்டத்தை  புதுவை வேளாண் துறை செயல்படுத்த தீவிரம் காட்டியுள்ளது. இதற்கான இ-டெண்டர் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனம் இறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்த நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. புதுவை விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டும் பலன்களை பெற  முடியவில்லை. புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் ராபி 2019--20 தொடர்பாக தீர்வு மற்றும் தீர்க்கப்படாத நிலுவை தொகை விவரங்களை  வழங்காமல் உள்ளது. 

2019--20, 2020--21-ம் ஆண்டில் மானிய கோரிக்கையுடன் இறுதி வணிக புள்ளி விவரங்களை வழங்கவில்லை. புதுவையில் 2019--20 ஆண்டின் ராபி--2 வாழை பயிரில் 74 விவசாயிகளை உள்ளடங்கிய 19.49 லட்சத்திற்கு தீர்வு காணப்படவில்லை. 

புதுவை,  காரைக்கால், ஏனாம் பகுதிகளில் காரீப் 2020--21, ராபி 2020--21 நிலுவையில் உள்ள மதீப்பிட்டை வழங்கவில்லை. மத்திய வேளாண் மந்திரி இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி புதுவையில் உள்ள விவசாயிகளின் பயிர் காப்பீடு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்