Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியுள்ளோம்- நிர்மலா சீதாராமன்

பிப்ரவரி 11, 2022 11:56

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது கொரோனா காலத்திலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மாநிலங்களவையில் பதிலுரை அளித்து பேசிய நிர்மலா சீதாராமன், 2008- 2009 ஆண்டில் விலைவாசி உயர்வு 9.1 சதவீதமாக இருந்தது. தற்போது கொரோனா காலத்திலும் விலைவாசி உயர்வை 6.2  ஆக கட்டுப்படுத்தியுள்ளோம் என்றார்.

மேலும், “மத்திய பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்