Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிகாலையிலேயே வாக்குப்பதிவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

மே 06, 2019 05:44

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு 4 கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று 5-வது கட்டமாக 51 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குகிறது.

ரம்ஜானையொட்டி நடைபெற இருக்கும் 5 மற்றும் 6-வது கட்ட மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு பதிலாக 4 மணிக்கே தொடங்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் முகமது நிஜாமூதின் பாஷா கோரிக்கை வைத்திருந்தார். அவரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. 

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தலை எந்தவித தவறும் இல்லாமல் நடத்தி முடிக்க இப்போதே தேர்தல் அதிகாரிகளுக்கு சுமார் 15 முதல் 16 மணி நேரம் ஆகிறது. தேர்தல் அதிகாரிகள் மட்டுமில்லாமல் பாதுகாப்பு பணியில் இருக்கும் அதிகாரிகளும் அவ்வளவு நேரம் பணியில் ஈடுபட வேண்டி உள்ளது.

தேர்தலை காலை 4 மணிக்கே தொடங்கினால், பூத் ஏஜெண்டுகளும் முன்கூட்டியே வர வேண்டியிருக்கும். ஆனால் தற்போது 6 மணிக்கு வர வேண்டிய பூத் ஏஜெண்டுகள் கூட சரியாக அந்த நேரத்திற்கு வருவதில்லை. 

இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் காலதாமதம் ஆகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மக்களவை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்