Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருமணத்துக்கு ஆதார் கார்டுடன் வந்த மதுப்பிரியர்களுக்கு மதுபாட்டில்-சிக்கன்

பிப்ரவரி 16, 2022 12:40

சிவகங்கை: திருமணத்தை விமரிசையாக நடத்துவது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து விட்டது. அதிலும் இளைஞர்கள் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் மற்றவர்களின் பார்வையில்படும் வகையில் நடத்த வேண்டும் என்ற ஆவலில் பேனர் வைப்பது உள்ளிட்ட வி‌ஷயங்களில் பல வித்தியாசமான நிகழ்வுகளை அரங்கேற்றுகின்றனர்.

அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிவகங்கை அருகே உள்ளது கீழக்கண்டனி கிராமம். இங்கு வாலிபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவிற்கு வருபவர்களுக்கு மதுபாட்டில் மற்றும் சிக்கன் வழங்கப்படும் என்று மணமகனின் நண்பர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர்.

பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த பிளக்ஸ் பேனர் பார்ப்பவர்களை கவர்ந்தது. மது பாட்டில் வேண்டும் என்றால் ஆதார் கார்டு கொண்டுவர வேண்டும் என்ற அறிவிப்பையும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த வாலிபர்கள் அறிவிப்பின்படி திருமண விழாவிற்கு வந்த மது பிரியர்களுக்கு மது பாட்டில்கள் வழங்கப்பட்டது.

அந்த வாலிபர்கள், ஆதார் அட்டையை காண்பித்த மது பிரியர்களுக்கு மது பாட்டில்கள் மற்றும் சிக்கன் வழங்கினர். திருமண மானவர்களுக்கு ஒரு மதுபாட்டிலும், திருமணமாகாதவர்களுக்கு 2 மதுபாட்டிலும் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்