Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்மு-காஷ்மீரில் இன்று நிலநடுக்கம்

பிப்ரவரி 16, 2022 07:13

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று அதிகாலை 5.43 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. அமர்நாத் யாத்திரை தொடங்கும் முகாம் பகுதியில் இருந்து சுமார் 16 கி.மீட்டர் தூரத்தில் நில அதிர்வு உணரப்பட்டது.

கடந்த 5-ந்தேதி இதே போன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. 10 நாட்களில் இந்த மாநிலத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்