Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நமது வலிமை அதிகரிப்பால் உக்ரைனில் இந்தியர்கள் மீட்பு: பிரதமர் மோடி

மார்ச் 02, 2022 06:33

ராபர்ட்கஞ்ச்: இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நமது நாட்டினரை பாதுகாப்பாக மீட்க முடிவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்கஞ்ச் பகுதியில் பா.ஜ., சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: ஆபரேஷன் கங்கா என்னும் திட்டத்தின் கீழ் உக்ரைனில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதுவரை ஆயிரக்கணக்கான பேரை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவந்துள்ளோம். இந்த பணியை விரைவுப்படுத்துவதற்காக, 4 மத்திய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பியுள்ளோம்.

'ஆத்மநிர்பர் அபியான்' என்று கேலி செய்பவர்கள் மற்றும் நமது பாதுகாப்பு படைகளை அவமதிப்பவர்களால் இந்தியாவை ஒருபோதும் வலுப்படுத்த முடியாது. இந்தியாவின் கோவிட் தடுப்பூசி குறித்து வதந்திகளை பரப்பியவர்களும் இதே நபர்கள்தான். இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நமது நாட்டினரை பாதுகாப்பாக மீட்க முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்