Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெட்ரோல் விலையை உயர்த்தினால் போராட்டம் நடத்துவோம்: ராகுல்காந்தி அறிவிப்பு

மார்ச் 02, 2022 06:44

புதுடெல்லி: மோடி அரசு பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அறிவித்து உள்ளார்.

கியாஸ் சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. நேற்று வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.105 உயர்த்தப்பட்டு ரூ.2,145.50 ஆக அதிகரித்தது.

அதேநேரத்தில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. மேலும் 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக பெட்ரோல்-டீசல் விலையும் உயர்த்தப்படாமல் உள்ளது.

இந்தநிலையில் மோடி அரசு பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

“கிஸ்கே அச்சே டின்” என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கியாஸ் சிலிண்டர் விலையை மீண்டும் ஒருமுறை உயர்த்தியதன் மூலம் சாமானியர்களின் துன்பங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மோடி அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. “இன்று எல்.பி.ஜி. , நாளை பெட்ரோல்-டீசல்...”

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அல்கா லம்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

பணவீக்கம் என்பது மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவு. பால் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்து உள்ளதால் மார்ச் முதல் நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்லியில் ஒரு சிலிண்டருக்கு ரூ.105 உயர்த்தப்பட்ட பிறகு வணிக பயன்பாட்டின் சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

5 மாநில தேர்தல் முடிந்தவுடன் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்களை ரூ.27 உயர்த்தப்படும் என்று அஞ்சப்படுகிறது. பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு பிரச்சினையை காங்கிரஸ் கட்சி எப்போதும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

தேர்தலுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும்.

உத்தரபிரதேசத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலின் போதுகூட கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் அம்மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது. விலை உயர்வால் மக்கள் ஆளும் கட்சியை தண்டிக்கப்போகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்