Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இரும்பு ஆட்சி அமைக்கும் நேரம் வந்துவிட்டது- மாயாவதி

மார்ச் 06, 2022 06:10

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியிருப்பதாவது:-

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் இறுதிக்கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்ளும் புறக்கணிக்கப்பட்ட மக்கள், தங்கள் வாக்குகளின் மூலம் தங்கள் தலைவிதியையும், மாநிலத்தின் தலைவிதியையும் மாற்றலாம்.

மக்களின் நலன் மற்றும் மகிழ்ச்சியை உறுதி செய்வதற்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் 'இரும்பு அரசாங்கம்' அமைப்பது அவசியம். எதிர்க்கட்சிகளின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும், உறுதிமொழிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதி அளித்தபடி மாநில மக்களுக்கு நல்லது செய்து அவர்களுக்கு 'நல்ல நாட்களை' (அச்சே தின்) கொண்டு வருவதற்குப் பதிலாக, நிலைமையை தொடர்ந்து மோசமடைய செய்துள்ளனர். இனியாவது மக்கள் அவர்களின் வார்த்தைகளுக்கு மயங்காமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

எதிர்க்கட்சிகள் அனைத்து விதமான யுக்திகளையும் கையாண்டு, சட்டசபை தேர்தலை தங்களுக்கு சாதகமாக்க முயற்சி செய்தன. ஆனால் பணவீக்கம், வறுமை, வேலையில்லா திண்டாட்டம், அரசின் எகாதிபத்தியம், தெருவில் சுற்றும் கால்நடைகளால் தொல்லை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநில மக்களுக்கு அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. என அவர் கூறி உள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்