Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தரகண்டில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக

மார்ச் 10, 2022 11:16

டேராடூன்: உத்தரகண்டில் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. அக்கட்சி தற்போது 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

70 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரகண்ட் சட்டசபைக்கு கடந்த பிப்.,14ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த முறை பா.ஜ., 57 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது.

இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் முன்னிலை பெற்றது. இது கடந்த முறை வென்ற தொகுதிகளை காட்டிலும் தற்போது 10 இடங்கள் கூடுதல் ஆகும். பகுஜன் சமாஜ் -2 ஆம் ஆத்மி 1 இடத்திலும் மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

அம்மாநில முதல்வரான பா.ஜ.,வை சேர்ந்த புஷ்கர் தமி, கதிமா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
அதேபோல், காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக கருதப்பட்ட ஹரீஸ் ராவத்தும் லால்குன் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர், அங்கு எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது இல்லை. பா.ஜ., மற்றும் காங்கிரஸ் மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில், தற்போது பா.ஜ., தக்க வைத்து சாதனை படைக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்