Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணிப்பூரில் பாஜக முன்னிலை

மார்ச் 10, 2022 11:38

இம்பால்: கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்று பாஜக ஆட்சி அமைந்தது. இம்முறையும் பாஜகவே ஆட்சியமைக்கும் என்ற கருத்துக்கணிப்புகளை உறுதி செய்யும் வகையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

60 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 12, என்பிபி 10, ஐக்கிய ஜனதா தளம் 6, பிற கட்சிகள் 9 என்ற நிலையில் முன்னிலை நிலவரம் இருக்கிறது. 31 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் பாஜக 26 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஒருவேளை நெருக்கடி ஏற்பட்டாடும் சுயேச்சை ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்கும் சூழலே நிலவுகிறது.

மணிப்பூர் முதல்வர் என்.பைரன் சிங், ஹெய்ன்கேங் தொகுதியில் 11,000க்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை மணிப்பூர் மட்டுமல்லாது உத்தரப் பிரதேசம், கோவா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

உ.பி. தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்று கூறப்பட்ட நிலையில் அங்கு 262 இடங்களில் பாஜக முன்னிலை வகிப்பது பாஜகவும் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

மேலும், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளால் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் உள்ளது.

தலைப்புச்செய்திகள்