Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உ.பி.,யில் 97 சதவீத காங்கிரஸ் வேட்பாளர்கள் டிபாசிட் இழப்பு

மார்ச் 12, 2022 11:26

லக்னோ: சமீபத்தில் நடந்து முடிந்துள்ள உ .பி.,மாநில சட்டசபை தேர்தலில் 97 சதவீத காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களின் டிபாசிட்டை இழந்துள்ளனர். சுயேச்சை உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் மொத்தம் மாநிலத்தில் போட்டியிட்ட 4 ,442 வேட்பாளர்களில் 80 சதவீதத்தினர் (3,522 பேர் ) தங்களின் டிபாசிட்டை இழந்துள்ளனர்.

இங்குள்ள மொத்தம் 403 தொகுதிகளில் 273 பேர் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மை பெற்று பா.ஜ., ஆட்சியில் அமர்கிறது. காங்கிரஸ் தரப்பில் போட்டியிட்ட 399 பேரில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். 387 பேர் தங்களின் டிபாசிட்டை இழந்துள்ளனர். மாநிலத்தில் காங்கிரஸ் மொத்தம் 2.4 சதவீத ஓட்டுக்களையே பெற்றுள்ளது. பகுஜன்சமாஜ் சார்பில் 403 பேர் போட்டியிட்டதில் 290 பேர் டிபாசிட்டை இழந்தனர்.

இதுபோல் பா.ஜ., தரப்பில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உள்பட 11 அமைச்சர்கள் தோல்வியை தழுவி உள்ளனர். சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் பல்லவி பட்டேலிடம் 7,337 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றார். இதனால் யோகி ஆதித்யநாத் துணை முதல்வராக யாரை தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்