Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் புதிதாக 2,539 பேருக்கு கொரோனா தொற்று

மார்ச் 17, 2022 11:51

புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 4,491 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 54 ஆயிரத்து 546 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

 அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

தினசரி பாதிப்பு கடந்த 14-ந் தேதி 2,503 ஆக இருந்தது. மறுநாள் 2,568 ஆகவும், நேற்று முன்தினம் 2,876 ஆகவும் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.

கேரளாவில் நேற்று முன்தினம் பாதிப்பு 1,193 ஆக இருந்த நிலையில் நேற்று 966 ஆக குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 1 ஆயிரத்து 477 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 60 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 50 பேர், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்குவங்கத்தில் தலா 2 பேர், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலபிரதேசத்தில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.

மற்ற 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் உயிரிழப்புகள் இல்லை. நாட்டில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5,16,132 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 4,491 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 54 ஆயிரத்து 546 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 30,799 ஆக சரிந்துள்ளது. இது நேற்றுமுன்தினத்தை விட 2,012 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 17,86,478 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 180 கோடியே 80 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 7,17,330 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 78.12 கோடியாக உயர்ந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்