Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹோலி பண்டிகை; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

மார்ச் 18, 2022 10:29

புதுடெல்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:

ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, சமூக நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கு உதாரணமாக விளங்குகிறது. ஹோலி பண்டிக்கை நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், புதிய ஆற்றலையும் ஏற்படுத்த வேண்டும் என வாழ்த்துகிறேன்.

பிரதமர் மோடி:

அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஹோலி வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும். ஹோலி பண்டிகை பரஸ்பர அன்பு, பாசம் மற்றும் சகோரத்துவத்தின் அடையாளமாக திகழ்கிறது.

தலைப்புச்செய்திகள்