Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளி பாடத்தில் பகவத் கீதை: குஜராத் அரசு அறிவிப்பு

மார்ச் 18, 2022 10:32

காந்திநகர் : குஜராத்தில் உள்ள பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளின் பாடதிட்டத்தில், பகவத் கீதை சேர்க்கப்படுவதாக, சட்டசபையில் அரசு அறிவித்துள்ளது.

குஜராத்தில், முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள இம் மாநிலத்தில், பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது.இதில் கல்வி துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது.

அப்போது மாநில கல்வி அமைச்சர் ஜீது வகானி கூறியதாவது: பகவத் கீதை நூலில் கூறப்படும் வாழ்க்கை நெறிமுறிகள், கோட்பாடுகள், அனைத்து மதத்தினராலும் ஏற்கப்பட்டுள்ள ஒன்று. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. நம் கலாசாராம், பண்பாடு, அறிவுக் களஞ்சியங்கள் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும்.

அதன்படி, குஜராத்தில், வரும் 2022 - 2023 கல்வியாண்டில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கான பாடதிட்டத்தில், பகவத் கீதை சேர்க்கப்படும்.இதைத் தவிர, பகவத் கீதையின் அடிப்படையில் பல போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பாடபுத்தகம் உள்ளிட்டவை பள்ளிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்